Published : 26,Oct 2021 02:31 PM
நெல்லை: பைனான்ஸியர் படுகொலையில் தம்பிக்கு தொடர்பா? போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நபர் கொலை செய்யப்பட்டார்.
முருகன் என்ற முருகானந்தம் கொலை செய்யப்பட்டது, வெளியில் சென்றிருந்த அவரது மனைவி மாலையில் வீடு திரும்பியபோது தெரியவந்தது. கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுபி வைத்தனர்.
ஊரக கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவல் துறையினர், தடயங்களை சேகரித்து கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர். சொத்துத் தகராறு காரணமாக அவரது தம்பியே முருகானந்தத்தை கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பைனான்ஸ் தொழில் செய்து வந்த முருகானந்தம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.