சீனாவில் சினோபார்ம் மற்றும் சினோவாக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.