[X] Close

புதுக்கோட்டை: கூரியர் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் – 3 பேர் கைது

குற்றம்

Pudukottai-3-persons-arrested-for-seizing-drugs-smuggled-by-courier

புதுக்கோட்டையில் இருந்து கூரியர் மூலமாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்ட புகாரில் கடந்த 23ஆம் தேதி 2 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 620 கிராம் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹாசிஸ் ஆயில் (Hashish Oil) பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேரிடமும் போதை பார்சல் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பாக நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அதன்பின்னர் அவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 21.48 கிராம் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹாசிஸ், 221 கிராம் மேஜிக் மஸ்ரூம் ஹனி பறிமுதல் செய்யப்பட்டது.

image


Advertisement

கைதான 3 பேரும் புதுக்கோட்டையிலும், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் போதைப்பொருள் விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், பார்சல் புக்கிங் போது போலி ஆவணங்கள் கொடுக்கப்படுவதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் இருப்பதாகவும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைப்படிக்க...’ஆஸ்கர்’ செல்லும் ‘கூழாங்கல்’ உண்மையான தமிழ் கிராமத்தின் இயல்பை காட்டும் படம்: வசந்தபாலன் 


Advertisement

Advertisement
[X] Close