[X] Close

கோவை: சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது

வீடியோ ஸ்டோரி

கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 21ஆம் தேதி குனியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் உள்ள மளிகை கடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவை கரும்புக்கடையை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செயின்பறிப்பின் போது அச்சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபர், கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பைசல் ரஹ்மான் என்கிற வட பைசல் என தெரியவந்தது.


Advertisement

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பைசல் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் குனியமுத்தூர், பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைப்படிக்க...தமிழகத்தில் தொடர்ந்து 31-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு 


Advertisement

Advertisement
[X] Close