[X] Close

திருவாரூர்: போலியான ஆவணங்கள் கொடுத்து நெல் மூட்டைகளை விற்க முயன்ற வியாபாரி

தமிழ்நாடு

Thiruvarur-Purchase-of-paddy-by-trader-with-fake-documents-Seizure-of-bundles

திருவாரூரில் போலியான ஆவணங்களை கொடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய முயன்ற வியாபாரியிடம் இருந்து நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் ராஜராஜனிடம் புகாரளிக்கப்பட்டது, இந்த புகாரைடுத்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.

image


Advertisement

அதனைத் தொடர்ந்து இன்று 73 நெல் மூட்டைகளின் விற்பனைக்காக கொண்டு வந்த சிட்டா அடங்கலை நன்னிலம் வட்டாட்சியர் பத்மினி ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் அந்த சிட்டா அடங்கல் கொண்ட நிலத்தில்  விவசாயம் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலியான ஆவணங்கள் கொடுத்து விவசாயி என்ற பெயரில் நெல் மூட்டைகளை விற்க வந்த வியாபாரியிடமிருந்து, 73 மூட்டைகளை பறிமுதல் செய்து திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

இதனைப்படிக்க...ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: அமைச்சர் கிண்டல் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close