[X] Close

டி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி!

விளையாட்டு

T20-World-Cup-Sri-Lanka-registers-first-win-in-T20-World-Cup-against-Bangladesh

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 171 ரன்களை குவித்தது. 


Advertisement

image

172 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. பத்து ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்திருந்தது இலங்கை. அதன்பிறகு பனுகா ராஜபக்சே மற்றும் சரித் அசலங்கா என இரண்டு பேட்ஸ்மேன்களும் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பனுகா, 31 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். 


Advertisement

முடிவில் 18.5 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது இலங்கை. சரித் அசலங்கா, 49 பந்துகளுக்கு 80 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். மிகவும் கடினமான குரூப் ‘1’-இல் இலங்கை அணி முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.   

இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை: சர்வதேச அணிகளின் ரன் குவிப்பு மந்தமாக இருக்க ஆடுகளம் காரணமா?-ஓர் அலசல் 


Advertisement

Advertisement
[X] Close