Published : 31,Jan 2017 02:51 AM
போலீசார் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒருவாரமாக இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருவதாக கூறும் மாணவர்கள் இதுவரை 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதேபோல் மெரினா போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பூவிருந்தவல்லி மற்றும் தஞ்சையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.