முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனக் கூறினார். இது அதிமுக அணிகள் இணைப்புக்கான முன்னெடுப்பாக கருதப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் விரைவில் இணையும் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தங்கமணி ஆகியோர் சந்தித்துள்ளனர். சென்னை போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயாரை சந்தித்துவிட்டு, அமைச்சர்கள் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அணிகள் இணைப்பு பற்றி பேசப்பட்டு வரும் சூழலில் ஓபிஎஸ் உடனான அமைச்சர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'