ஈரானில் ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்

ஈரானில் ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்
ஈரானில் ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்

ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக மேடை ஏறிய ஒருவர், அபிதினின் கன்னத்தில் அறைந்தார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அயுப் அலிஜாதே என்ற அவர், ஆளுநரை அறைந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவம் செய்தததால் கோபத்தில் அவர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com