உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதியில் உட்கட்சி பூசலின் உச்சமாக, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை முலாயம் சிங்கிற்கும் மகனுக்கும் இடையே சமரசம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மிகப்பெரிய அரசியல் போர் ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில், முலாயம் சிங், மாநில தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் பங்கேற்காத நிலையில், அகிலேஷ் யாதவ் தேசிய தலைவராக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமர்சிங் கட்சியில் இருந்தும், ஷிவ்பால் சிங் மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், அகிலேஷ் தலைமையிலான தேசிய மாநாடு சட்டவிரோதமானது என முலாயம் சிங் அறிவித்துள்ளார். இதனால், கட்சியில் குழப்பம் மட்டுமே எஞ்சியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முலாயம் சிங் மற்றும் அவரது தம்பி ஷிவ்பால் யாதவ் ஓரணியாக உள்ளனர். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவும் அவரது சித்தப்பாவும் எதிரணியாக செயல்பட்டு வருகின்றனர்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!