Published : 24,Oct 2021 07:09 AM

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Order-to-take-action-against-unaccredited-schools

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கட்டட உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் போதிய இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் கல்விக் கட்டணம் தொடர்பான பட்டியல், தகவல் பலகையில் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்