டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்றப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது.
துபாயில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ், எவின் லீவிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்பு அடுத்தடுத்து வந்த ஹெட்மயர், பிராவோ, பூரண், பொல்லாப்ட், ரசல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைகட்டினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் மட்டுமே 13 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டையும், மொயின் அலி, டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போது எளிதான இலக்கை எட்டி வெற்றிப்பெற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுன்னர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்