துல்கர் சல்மானின் ‘குருப்’ திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு ’குருப்’, ‘ஹே சினாமிகா’, ‘சல்யூட்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படம், செளபின் சாகிரின் புதிய படம் என நடித்து வருகிறார் துல்கர்.
இந்த நிலையில், கேரளாவையே கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் ‘குருப்’ வரும் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. முன்பு, தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடியில் வெளியாகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது கேரள அரசு. இதனால், உற்சாகமுடன் அதிகாரபூர்வமாக தியேட்டர்களில் ‘குருப்’ வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறது படக்குழு.
துல்கர் சல்மானே நடித்து தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் ‘குருப்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்