Published : 23,Oct 2021 04:26 PM

யூடியூப் ட்ரெண்டிங்கில் 2-ம் இடம்... 6 லட்சம் பார்வைகளைக் கடந்த ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர்

Actor-suriya-jai-bhim-trailer-ranked-second-on-YouTube-Trending

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் ட்ரெய்லர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ஏற்கனவே, சூர்யா படங்களில் ஒரே நாளில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசர் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெய்லர் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்த நிலையில், ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர் காலையில் இருந்து முதலிடத்தில் இருந்து தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதோடு, வெளியான 22 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்