
மலையாள நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை ரம்யா நம்பீசனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகர் திலீப் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அடுத்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் கேரள போலீசார் நடிகை ரம்யா நம்பீசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளான அந்த நடிகை, அவரது நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் வீட்டில்தான் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரைத் தேடி வந்தவர்கள் மற்றும் அவரிடம் பேசியவர்கள் பற்றி ரம்யா ரம்பீசனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைத்து சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.