Published : 22,Oct 2021 10:14 AM

நெல்லை: ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

Nellai-Mysterious-death-of-a-male-elephant-Forest-officials-are-investigating

பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 14 வயது ஆண் யானை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில், வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டனர்.

image

இதுகுறித்து திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்பு அதே பகுதியில் அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்