எனிமி படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை - தயாரிப்பாளர் வினோத் புகார்

எனிமி படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை - தயாரிப்பாளர் வினோத் புகார்
எனிமி படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை - தயாரிப்பாளர் வினோத் புகார்

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என மறைமுகமாக நெருக்கடி கொடுக்க படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, சிலம்பரசன் நடித்த மாநாடு, விஷால் - ஆர்யா நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

விடுமுறை நாட்களில் மூன்று படங்கள் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி வெளியீட்டில் இருந்து மாநாடு படம் விலகிக்கிகொள்வதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அண்ணாத்த, எனிமி ஆகிய இரண்டு படங்கள்தான் வெளியாகும் என இறுதியானது.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சில வினியோக ஏரியாக்களில் அண்ணாத்த திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என மறைமுக உத்தரவு வருகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தன்னுடைய படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவிக்கிறார்.

விநியோகஸ்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதால் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மூன்று ஏரியாக்களுக்கான வியாபாரம் மட்டுமே நடைபெற்றுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு வட ஆற்காடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கான உரிமை திரையங்குகள் கிடைக்குமான என்ற அச்சம் காரணமாக விற்பனையாகவில்லை என கூறுகிறார்.

தமிழகத்தில் எனிமி திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் போதுமானது என தயாரிப்பாளர் வேண்டுகோள் வைத்துள்ளார். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்படும் என்று வினோத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆலங்குளம் டி.பி.வி திரையங்கத்தின் சமூக வலைதள பக்கத்தில் எனிமி வெளியாகாது என பதிவிட்டுள்ளனர். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் எனிமிக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கிம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

- செந்தில்ராஜா 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com