Published : 21,Oct 2021 05:49 PM
போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் அக்டோபர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறையில் அடைத்தது. ஆர்யன்கான் சார்பில் இரண்டுமுறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த போதும் அவற்றை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஆர்யன்கானின் தோழியான நடிகை அனன்யா பாண்டேவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சம்மன் அனுப்பியதை அடுத்து அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
Drugs on cruise ship matter | Mumbai: Special NDPS Court extends judicial custody of Aryan Khan and others till 30th October.
— ANI (@ANI) October 21, 2021
இதனிடையே ஷாருக்கான் இல்லத்திற்கு சென்று ஆர்யன்கான் பயன்படுத்திய டிஜிட்டல் கருவிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவற்றை ஆய்வுசெய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். தற்போது, ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் அக்டோபர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம் - அமைச்சர் சி.வி. கணேசன்