Published : 20,Oct 2021 05:18 PM

ஆலங்காயம் : ஒன்றிய தலைவர் பதவி யாருக்கு? திமுக-வினர் இடையே வெடித்த கோஷ்டி மோதல்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு  2ஆம் கட்ட தேர்தல் கடந்த 9ஆம் தேதி  நடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஒன்றிய குழு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இன்று ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் 18 இடங்களில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி  2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் 1  இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அவர்கள் பதவி ஏற்று வெளியில் வந்தவுடன் திமுகவில் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காயத்ரி பிரபாகரன் மற்றும் சங்கீதா பாரி ஆகிய இரு கோஷ்டிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் காவல்துறையினர் உடனடியாக லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்