Published : 20,Oct 2021 01:41 PM
உள்ளாட்சித் தேர்தலில் வென்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 20, 2021
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O