Published : 20,Oct 2021 10:50 AM
முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

தங்க காசு விநியோகிப்பதற்கான டெண்டர் விதிமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக 8 கிராம்கள் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வழங்குவதற்காக 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது. டெண்டரில் வெற்றி பெற்ற முத்தூட் எக்சிம் நிறுவனம், தங்க விலை உயர்வு காரணமாக தொகையை மாற்றும்படி கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்க மறுத்த தமிழக அரசு, முத்தூட் செலுத்திய வைப்புத்தொகை 53 லட்ச ரூபாயை முடக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீர்வு காணாமல் நீதிமன்றத்தை நாடமுடியாது என கூறி, முத்தூட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க:புதுச்சேரியில் நடக்காத தேர்தல்: நடைமுறையில் நடத்தை விதிகள்