[X] Close

திருவள்ளூர்: மனைவிக்கு வரன் தேவை என விளம்பரம் செய்த கணவர் கைது

குற்றம்

While-the-divorce-case-was-in-the-court-the-person-who-posted-the-details-of-the-wife-in-the-internet-marriage-information-center-and-advertised-that-the-groom-was-wanted-was-arrested-in-Tiruvallur
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, மனைவியின் விபரங்களை இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு, வரன் தேவை என விளம்பரம் செய்த நபர், திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
 
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சி ராணி-ஓம்குமார் தம்பதி, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். திருமணம் முடிந்து ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து நாடு திரும்பிய ஓம்குமார், விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திருமண தகவல் மையத்தில் இருந்து பேசுவதாகவும், வரன் பார்ப்பதற்காக தங்கள் மகளின் விவரங்களை பதிவு செய்தமைக்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி, ஜான்சியின் தந்தைக்கு, தொடர் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. விசாரணையில், ஓம்குமாரே மனைவி குறித்த விவரங்களை, மாமனாரின் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு திருமண பதிவு மையத்துக்கு அளித்தது தெரியவந்தது.
 

Advertisement

Advertisement
[X] Close