[X] Close

பாக்., உடனான ஆசியக்கோப்பை கிரிக்கெட்: மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கும் பிசிசிஐ‌

BCCI---seeks-government-nod-involving-Pakistan-in-2018

பாகிஸ்தான் அணி அடங்கிய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


Advertisement

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை போட்டியை நடத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனால் தான் அந்தப்போட்டி மலேசியாவிற்கு இடம் மாற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டார். இந்தநிலையில் சீனியர்களுக்கான ஆசியக்கோப்பை போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இது போன்ற பெரிய தொடர்களில் ‌இந்திய-பாகிஸ்தான் அணிக‌ள் மோதும் போட்டி இல்லையென்றால், அந்தத் தொடர் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் பிசிசிஐ மூத்த நிர்வாகி கூறியிருக்கிறார்.
 


Advertisement

Advertisement
[X] Close