Published : 19,Oct 2021 09:22 PM
அம்மா உணவகங்களில் பணிநிரந்தரம் கோரி திரண்ட பணியாளர்கள்

அம்மா உணவகங்களில் பணி நிரந்தரம் கோரியும், ஆட் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மா உணவக பணியாளர்கள் முதலமைச்சரை சந்திக்க அண்ணா அறிவாலயம் திரண்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருந்த நேரத்தில், முற்றுகையிட்டு கவனத்தை ஈர்க்க அம்மா உணவக பணியாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்களிடம் சமரசம் பேசிய காவல்துறையினர், ஆட்குறைப்பு தொடர்பாக தவறான தகவல் கொடுக்கப்பட்டிருப்பதால் அதிகாரிகளிடமிருந்து தெளிவான விளக்கம் பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அம்மா உணவக பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
புதிய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கும் இலங்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்