[X] Close

முதலமைச்சர் அறிவிப்பு: ஓபிஎஸ் நாளை ஆலோசனை

Opanneerselvam-team-Meeting-Tommorrow


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மற்றும் அவரது நினைவிடம் தொடர்பாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் நாளை ஓ.பன்னீர் செல்வம் தனது அணியினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் எனவும் ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் எனவும் அவரது வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியினர் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். நாளை காலை பத்து மணிக்கு ஓபிஎஸ் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுள்ள நிலையில்,  நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அணிகள் இணைப்பு தொடர்பாக அவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close