விஜய் தேவரகொண்டா - ரீத்து வர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ‘பெல்லி சூப்புலு’ (Pelli Chooplu) திரைப்படத்தை தமிழில் ‘Oh மணப்பெண்ணே’ என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வரும் 22ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், இதுவரை பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு ஹீரோயினாக நடித்தேன். ஆனால் Oh மணப்பெண்ணே படம் என்னுடைய திரைப்படம் என பெருமையாகக் கூறிக் கொள்வேன் என அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழுக்கு தகுந்த மாதிரி சில மாற்றங்கள் செய்து இந்த படத்தை உருவாகியுள்ளதாகவும் பிரியா பவானி சங்கர் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், இந்த திரைப்படத்தை 2018ஆம் ஆண்டு ரீமேக் செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது. பிறகு பல்வேறு தயாரிப்பாளர்கள் மாறி இறுதியாக தற்போது Oh மணப்பெண்ணே திரைப்படம் உருவாகி உள்ளது என கூறினார். அதேபோல் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் என இயக்குனர் கார்த்திக் சுந்தர் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்தனர்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்