Published : 18,Oct 2021 08:47 PM
இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸ் வாட்ச் ‘ஹாரி பாட்டர்’ லிமிடெட் எடிஷன்!

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ‘ஹாரி பாட்டர்’ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச். வட்ட வடிவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த வாட்ச். இதில் ஹாரி பாட்டர் தீமில் வாட்ச் ஃபேஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 21-ஆம் தேதி முதல் இந்த வாட்ச் விற்பனையை இந்தியாவில் தொடங்குகிறது அந்நிறுவனம்.
சிறப்பம்சங்கள் என்ன?
ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் சுமார் 110 விதமான வொர்க்-அவுட் மோட்களை கொண்டுள்ளது இந்த வாட்ச். 1.39 இன்ச் HD டிஸ்பிளே. 2.5D கர்வ்டு (Curved) கிளாஸ் கொண்டுள்ளது இந்த வாட்ச்.
No letters or wands needed to enter the Wizarding World. Now, discover magic with the OnePlus Watch Harry Potter Limited Edition.
— OnePlus India (@OnePlus_IN) October 18, 2021
Get notified at: https://t.co/kjAZEtnr6N or visit OnePlus Store App#SmartEverywear pic.twitter.com/CgCJUXpuIN
ஹாரி பார்டர் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வாட்ச் ஃபேஸ்களாக கொடுத்துள்ளது ஒன்பிளஸ். இதன் ஸ்ட்ரேப் தோலினால் செய்யப்பட்டுள்ளது. அழைப்புகள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷனை இதில் மேனேஜ் செய்யலாம். ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட் டிவியிலும் இதனை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். இதன் விலை 16,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.