டிடிவி தினகரன் கோரிக்கைக்கு ஏற்ப அரசு விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது எனக் கருதுவதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், ‘நாங்கள் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். மேலூர் கூட்டத்திலே அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா இறந்த பின்னால் தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட மக்கள் இதில் ஏதோ மர்மம் இருக்குமோ என்கின்ற ஐயப்பாட்டை எழுப்பி பலரும் இன்னுமும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வேண்டும் என்றே பொதுச்செயலாளர் சசிகலா மீதே பழியைப்போட்டார்கள். ஆனால் எங்களுடைய நிலைப்பாடெல்லாம் ஒரு நீதிபதி போதுமா? என்பதுதான். இப்போது அமர்வு நீதிபதிகளாக இருக்கக் கூடிய இன்னும் இரு நீதிபதிகளைக்கூட சேர்த்து ஒரு கமிஷனை அமைக்கலாம். விசாரணை துரிதமாக அமைய வேண்டும். வேகமாக மக்கள் அறிவதற்கு இது உதவும். இந்த அறிவிப்பை அறிவித்து விட்டு இன்னும் இரு நாட்களில் இரு அணிகளும் இணைந்தால் இது அணிகள் இணைப்பிற்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு அறிவிப்பாக மாறிவிடும். ஆகையால் இது மக்களுக்கான அறிவிப்பாக இருக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!