2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். அதனால் அவருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும் கிடைத்திருந்தது. இந்நிலையில் அவரை சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
“நம் நாட்டுக்காக விளையாட ருதுராஜ் தயாராகிவிட்டார். நெருக்கடியான சூழலில் அவரது அபாரமான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தியதே அதற்கு சான்று. அது பிளே-ஆஃப் போட்டிகளிலும் தொடர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட தோனியை போன்ற குணாதிசயத்தை கொண்டவர் அவர்.
மிகவும் அமைதியானவர். தனது இலக்கை அடைவதில் கவனமாக இருப்பார். அதற்காக கடுமையாக உழைக்க கூடியவர்” என ரெய்னா சொல்லி உள்ளார்.
மேலும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தங்களது தொடக்க வீரர்கள் என தெரிவித்துள்ளார். இருவரும் 2021 சீசன் முழுவதும் அணிக்கு தேவைப்பட்ட நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் என ருதுராஜ் மற்றும் டூ ப்ளசிஸை பாராட்டியுள்ளார் அவர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்