
கேரளாவில் கோட்டயம், பத்தனம் திட்டா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.