சசிகலா ஆதரவாளர்களிடம் 6 செல்போன், ரூ.45,000 திருட்டு

சசிகலா ஆதரவாளர்களிடம் 6 செல்போன், ரூ.45,000 திருட்டு
சசிகலா ஆதரவாளர்களிடம் 6 செல்போன், ரூ.45,000 திருட்டு

சென்னை மெரினா கடற்கரைக்கு சசிகலா வந்தபோது, கூட்டத்தில் தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் 45ஆயிரம் ரூபாய் பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.

அதிமுக பொன்விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். அப்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இங்கு கூடியதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சாந்தகுமார், பேச்சி முத்து, முனுசாமி உட்பட 6 தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் ரமேஷ், பரத்குமார்,பாபு ஆகியோரின் பர்ஸிலிருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com