தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொளத்தூர் தொகுதியில் அண்மையில் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்குச் சொந்தமான கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென மதத்தீண்டாமையோடு கொடுக்கப்பட்டுள்ள திமுக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது.
தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் மதம் சார்ந்த அமைப்புகளால் நிருவகிக்கப்படும் கல்வி நிறுவனங்களிலும்கூட, மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்துவரும் வேளையில், அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது” என தெரிவித்திருக்கிறார்
தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் தமிழ்நாடு அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!https://t.co/0jiK9SA553 pic.twitter.com/CwE2tzX8vg — சீமான் (@SeemanOfficial) October 16, 2021
இதனைப்படிக்க...கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும்: ராதாகிருஷ்ணன்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்