'ஜெய் பீம்’ டீசர்: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.. 8 மில்லியன் வியூஸ்களைக் கடந்து சாதனை

'ஜெய் பீம்’ டீசர்: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.. 8 மில்லியன் வியூஸ்களைக் கடந்து சாதனை
'ஜெய் பீம்’ டீசர்: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.. 8 மில்லியன் வியூஸ்களைக் கடந்து சாதனை

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திலும் 8 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை செய்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், இதுவரை வெளியான சூர்யா படங்களின் டீசரில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த டீசர் என்ற சாதனையையும் படைத்துள்ளது ‘ஜெய் பீம்’. இதற்குமுன், வெளியான 24 மணி நேரத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ டீசர் 5 மில்லியன் பார்வைகளையும், ‘என்.ஜி.கே’ 4.7 மில்லியன் பார்வைகளையும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ 4.1 மில்லியன், ‘காப்பான்’ 4 மில்லியன் பார்வைகளையும் கடந்திருந்தது,

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com