
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல் கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய வட மாவட்டங்களில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க... சிஎஸ்கே சீருடையில் டேவிட் வார்னர்.. அடுத்த ஐபிஎல் சீசனுக்கு சிக்னலா...!
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.