[X] Close

சிஎஸ்கே சீருடையில் டேவிட் வார்னர்.. அடுத்த ஐபிஎல் சீசனுக்கு சிக்னலா...!

விளையாட்டு

What-do-you-say-about-Dhoni-now-Australian-Cricketer-David-Warner-congratulates-Chennai-Super-Kings-Team-for-winning-IPL-2021-Title

நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டியுள்ளார் டேவிட் வார்னர். நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வார்னர் விளையாடி இருந்தார். 

image

“அபாரமான வெற்றியை பதிவு செய்த சென்னை அணிக்கு எனது வாழ்த்துகள். இப்போது இந்த மனிதர் (தோனி) குறித்து என்ன சொல்வீர்கள்? உங்களால் இன்னும் நம்பமுடியவில்லையா?” என சென்னை அணிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் வார்னர். 


Advertisement

முன்னதாக சென்னை அணியின் ஜெர்ஸியை அணிந்த படி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் வார்னர். ரசிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களது அன்பு கட்டளையை ஏற்று இதை செய்ததாகவும் ட்விட்டரில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் அதை பின்னர் நீக்கிவிட்டார். அந்த படத்தை வைத்து அடுத்த சீசனில் சென்னை அணிக்காக வார்னர் விளையாடுவார் என்ற யூகங்களும் பறக்கின்றனர். அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2022 சீசனுக்கான ஏலம் நடைபெறுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close