
நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னையின் வெற்றியை உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லி உள்ளார்.
“அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கர்ஜித்துள்ளது. அணியின் வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதுமுள்ள சென்னை அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தனது வாழ்த்துகளை சென்னை அணிக்கு தெரிவித்துள்ளார்.