
நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியனாகி உள்ளது சென்னை.
கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இருப்பினும் அவர்களை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். அதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. தாக்கூர், ஜடேஜா, ஹேசல்வுட், பிராவோ, தீபக் சாஹர் என சென்னை அணியின் பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.