[X] Close

எல்லைக் கோட்டில் மேஜிக் செய்த தீபக் சாஹர் - மிரள வைத்த ‘கேட்ச்’

விளையாட்டு

CSK-Bowler-Deepak-Chahar-Take-a-super-catch-at-the-boundary-line-against-KKR-in-the-IPL-final-2021

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் 86 ரன்கள் விளாசினார். 

image

பரபரப்பான இறுதிப் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. கொல்கத்தா அணியில் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 10 ஓவர்களில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்தது. 


Advertisement

அந்த நேரத்தில் தான் 11வது ஓவரை ஷர்துல் தாக்கூரி வீசினார். நான்காவது பந்தில் வெங்கடேஷ் ஐயர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் முதல் பந்திலே ரானாவை டக் அவுட் ஆக்கினார் ஷர்துல். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார் ஷர்துல். அடுத்த ஓவரில் சுனில் நரைன் விக்கெட்டை சாய்த்தார் ஹசல்வுட். பின்னர் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது.

ஆட்டத்தின் 17வது ஓவரை ஹசல்வுட் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எல்லைக் கோட்டிற்கு விளாசினார் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கல். எல்லைக் கோட்டின் நெருக்கான நின்று கொண்டிருந்த தீபக் சாஹர் அந்த பந்தினை பிடித்துவிட்டார். எல்லைக் கோட்டை நெருங்கிவிட்டதால் பந்தினை மேலே வீசிவிட்டு அவர் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிட்டு பின்னர் உடனடியாக உள்ளே வந்து தாவி பந்தை பிடித்தார். விக்கெட்டையும் உறுதி செய்தார்.


Advertisement

Advertisement
[X] Close