[X] Close

37 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பு.. நல்ல தொடக்கத்தை தவறவிட்ட கொல்கத்தா!

விளையாட்டு

IPL-Final-2021-KKR-loses-8-Wickets-in-Just-37-balls-against-CSK

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதல் பேட் செய்த சென்னை 192 ரன்களை எடுத்தது. அந்த ரன்களை கொல்கத்தா சேஸ் செய்தது. 

கொல்கத்தாவிற்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கி இருந்தனர். இருவரும் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 11-வது ஓவரின் நான்காவது பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார் வெங்கடேஷ். 

அதற்கடுத்த 36 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்தது. அது அந்த அணியை ஆட்டத்தில் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளது. சென்னை அணியின் பவுலர்கள் தாக்கூர் மற்றும் ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close