Published : 15,Oct 2021 07:29 PM
வெற்றிகரமான நீண்ட பயணம்.. டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக தோனியின் 300-வது போட்டி இது!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் விளையாடுகின்றன. டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக தோனியின் 300-வது போட்டியாக அமைந்துள்ளது இந்த இறுதி போட்டி. அதோடு ஒன்பதாவது முறையாக சென்னை அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துகிறார் தோனி.
View this post on Instagram
டி20 கிரிக்கெட்டில் தோனி கேப்டனாக அணியை வழிநடத்தினால் 59.79 வெற்றி வாய்ப்பை உறுதி செய்வார் என அவரது சக்சஸ் ரேட் சொல்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை கேப்டனாக 72 டி20 போட்டிகளில் வழிநடத்திய தோனி 41 வெற்றிகளையும், 28 தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஒரு போட்டி சமனிலும், இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
தோனி தலைமையிலான சென்னை அணி 213 போட்டிகளில் விளையாடி 130 வெற்றிகள், 81 தோல்விகளை தழுவியுள்ளது. புனே அணிக்காக 14 போட்டிகளில் கேப்டனாக தோனி செயல்பட்டுள்ளார். அதில் 5 வெற்றிகள், 9 தோல்விகளை அந்த அணி சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தோனி தான்.
இதையும் படிக்கலாம் : ரத்தம் வடிய பேட்டிங் செய்த வாட்சன் .. சிஎஸ்கேவின் மறக்க முடியாத ஐபிஎல் இறுதிப்போட்டி!