நடிகர் அஜித் நடிப்பில் தயாராகியுள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளிவந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் 3-வது முறையாக இணைந்து நடித்துள்ள படம் விவேகம். சமூக வலைத்தளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள ட்ரெய்லர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தத்தில், 2:24 நிமிடம் ஓடக்கூடிய ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று வெளியான விவேகம் படத்தின் டிரைலர் தற்போது 12 மணி நேரத்தில் கடந்தாண்டு வெளியான தெறி பட ட்ரெய்லரின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 12 மணி நேரத்துக்குள் சுமார் 20 லட்சம் பார்வைகளை 'விவேகம்' ட்ரெய்லர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரை பார்த்துவிட்டு 'விவேகம்' ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இப்படம் வருகின்ற 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி