நாமக்கல் அருகே திருமணம் ஆன பெண்ணையே மீண்டும் திருமணம் செய்துவைத்த மோசடி சம்பவம் நடந்தேறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மோசடி திருமணத்திற்கு கணவரும், இடைத்தரகரும் உடந்தையாக செயல்பட்டனரா என புதுசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கடந்தபட்டியை சேர்ந்தவர் வேலு (எ) ஜனகராஜ் (35). விவசாயம் செய்துவரும் இவர் திருமணம் ஆகாத நிலையில் பெண் தேடி வந்துள்ளார். இதற்கிடையில் கோவில்பட்டியை சேர்ந்த பெண் தரகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரின் உதவியோடு கோவில்பட்டியை சேர்ந்த கெளரி(40) என்ற பெண்ணுடன் திடீர் ஏற்பாட்டின் பேரில் கடந்த 11-ம் தேதி கோவில்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஜனகராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்திட அவரது கல்வி சான்றிதழ், ஆதார் மற்றும் ரேசன் அட்டை நகல்களை பெற்றுள்ளனர். அதில் குடும்ப அட்டையில் கெளரிக்கு ஏற்கனவே திருணம் ஆகி குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.
கடலூர் : ராட்சத குழாய்களில் சேதம்.. நீர்வீழ்ச்சி போல் ஆற்றில் வீணாக கொட்டும் தண்ணீர்
இதனையடுத்து உஷாரான ஜனகராஜ் கெளரியின் மற்ற ஆவணங்களை பரிசோதித்ததில் அதிலும் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜனகராஜ் புதுசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் கெளரி, இடைத்தரகர்கள் ராம்குமார், ராஜா உள்ளிட்டோரிடம் புதுசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த மோசடி திருமணத்திற்கு அப்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்தாரா எனவும், கமிஷன் பணம் ஒரு லட்சத்திற்காக தரகர்கள் மோசடி திருமணம் செய்து வைத்தாரா எனவும் திருமணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் செயல்படுகின்றதா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்