[X] Close

எல்லை மீறுகிறதா தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனை? ஓர் அலசல்!

சிறப்புக் களம்

Tamil-cricket-commentary-crossing-the-line-of-Control-A-detailed-analysis

விளையாட்டு எப்போது நேரலையாக பிராட்காஸ்ட் செய்யப்பட்டதோ அப்போது முதலே அந்த விளையாட்டுக்கு உயிர் கொடுத்து வருவது வர்ணனை தான். சிறந்த மொழி வளம் மற்றும் விளையாட்டு சார்ந்த ஆர்வமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வர்ணனையாளராக மிளிரலாம். அதற்கு நமது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் விளையாட்டுப் போட்டிகளை மக்களிடையே இரண்டற கலப்பது வர்ணனையாளர் தான். ஆனால் அண்மைய காலமாக தமிழ் கிரிக்கெட் போட்டிகள் வர்ணனையில் அது மிஸ் ஆகிறதோ என்ற எண்ணத்தை தூண்டச் செய்கிறது. இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

image
விளையாட்டு வர்ணனையின் வரலாறு!
விளையாட்டை பொறுத்தவரை வர்ணனையானது கடந்த 19-ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் தொடங்கி உள்ளதாக வரலாறு சொல்கிறது. முதன் முதலில் கால்பந்தாட்ட போட்டி ஒன்று கனடாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டி ஒன்று தந்தி (Telegraph) மூலமாக கமெண்ட் செய்யப்பட்டுள்ளது. அப்படியே வானொலி, தொலைக்காட்சி என பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போது நமது கைகளில் உள்ள ஸ்மார்ட் போன்களில் ஓடிடி தளம் வழியே நேரலையில் விளையாட்டுப் போட்டிகளை வர்ணனையுடன் பார்த்து வருகிறோம்.

வர்ணனை என்றால் அது ஆட்டத்தின் நிலை குறித்து வர்ணிப்பது, புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டுவது, மைதானத்தின் சைட்லைனில் நின்று கொண்டு கமெண்ட் செய்வது, அரங்கில் இருந்தபடி போட்டியை பிரசென்ட் செய்வது, உரையாடல் போல சக வர்ணனையாளர்களுடன் இணைந்து போட்டி குறித்து வர்ணிப்பது என பல பங்கினை கொண்டுள்ளது. இப்போது கிரிக்கெட்டில் பெரும்பாலும் இந்த அனைத்து ரோல்களையும் உரையாடல் போலவே பிரசென்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை கடந்த 1927-இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி போட்டி ஒன்று வானொலியில் நேரலையில் வர்ணனை செய்ததே தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.

image

தமிழில் விளையாட்டு வர்ணனை!

தமிழ் மொழியில் விளையாட்டு வர்ணனையை பொறுத்த வரையில் முதல் லைவ் கமெண்டரிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அறிவிப்பாளர்கள் என சொல்லலாம். போட்டி நடைபெறும் நேரத்தில் அனைவரையும் சமாளித்தபடி மைக்கை பிடித்துக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்கவே படு ஜோராக இருக்கும்.

விருமாண்டி படத்தில் அப்படி ஒரு ரோலை தமிழ் அறிஞர் கு.ஞானசம்மந்தன் செய்திருப்பார். இப்போதும் கூட ஜல்லிக்கட்டு விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதற்கு உயிர் கொடுப்பது இந்த அறிவிப்பாளர்கள் தான். அதை இல்லை என்று மறுக்கவே முடியாது. அவர்கள் அனுபவத்தால் பாடம் கற்றவர்கள்.

இப்படியாக உறியடி, மஞ்சு விரட்டு, ரேக்ளா, கிட்டிப்புள், குதிரை பந்தயம் என அறிவிப்பாளர்கள் வர்ணனையாளர்களாக பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. முன்பு சிறிய வட்டத்துக்குள் இருந்த அவர்களது அறிமுகம் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

image

தமிழில் கிரிக்கெட் வர்ணனை!

தமிழ் மொழியில் கிரிக்கெட் வர்ணனையை அறிமுகம் செய்தவர் காலஞ்சென்ற அப்துல் ஜப்பார். வானொலியில் ஒலிபரப்பாகின்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வம் நாளடைவில் நிகழ்ச்சிகள் குறித்த கடிதத்தை எழுதவும் தூண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த கடிதத்தின் மூலமாக தமிழ்நாடு - கேரளா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைக்கான போட்டியை வர்ணனனை செய்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. அந்த வாய்ப்பின் மூலம் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் விளையாட்டு வர்ணனையாளராக மாறினார் அப்துல் ஜப்பார்.

டெஸ்ட், ஒருநாள் என கடந்த 2004 வரை வர்ணனையாளராக செயல்பட்ட அவர் அதன் பிறகு ESPN, ஐபிசி மாதிரியான சர்வதேச ஊடக நிறுவனத்தில் கிரிக்கெட் போட்டிகளை அவர் வர்ணனை செய்துள்ளார். அவரது வர்ணனையை கேட்பதற்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்தது உண்டு. பின்னர் அப்படியே பலரும் கிரிக்கெட் விளையாட்டை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வர்ணனை செய்ய தொடங்கினர்.

image

தற்போதைய தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையில் என்ன சிக்கல்?

ஆர்.கே, பாவனா, RJ பாலாஜி, பத்ரிநாத், அபினவ் முகுந்த், சடகோபன் ரமேஷ், நானி மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியவர்கள் அடங்கியுள்ளனர்.
பொதுவாக வர்ணனை என்றால் அது அந்தப் போட்டியில் உள்ள வீரர்கள், அதில் விளையாடும் அணிகள் குறித்தும், அவர்களது சக்சஸ் குறித்தும், மைதானத்தில் நடத்துகின்ற சுவாரஸ்யம் குறித்தும், கிரிக்கெட் விளையாட்டுக் குறித்தும், அது சார்ந்த வரலாறு குறித்தும் தான் தூக்கலாக இருக்கும்.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஹர்ஷா போக்லே. கிரிக்கெட்டை அழகாக எடுத்து சொல்வதில் இவர் வல்லவர். அதே போல வீரர்களிடம் பேட்டி காண்பதிலும் கைதேர்ந்தவர். சமயங்களில் ஒரு வீரர் அவுட்டாகும் போது அதற்கு என்ன காரணம் என்பதையும் எடுத்து சொல்பவர். அவர் சொல்வதை கேட்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

image

2011 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நினைவலைகளை புரட்டிப் பார்த்தால் மகேந்திர சிங் தோனி அடித்து முடித்துக் கொடுத்த அந்த சிக்சர் அனைவருக்கும் கண்முன் வந்து செல்லும். மறுபக்கம் அப்போது அதை வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வர்ணனையாளரும், இந்நாள் இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சொன்ன “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years” என்ற இந்த வைர வரிகள் நினைவுக்கு வரும்.

அண்மையில் கூட டெல்லி அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் தோனி சென்னை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்த போது ரவி சாஸ்திரி சொன்ன வரிகளை பலரும் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டாடி இருந்ததை பார்க்க முடிந்தது. வர்ணனை இப்படி இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ள வர்ணனையாளர்கள் சிலர் வீரர்களை கமெண்ட் செய்யும் விதம் கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் பாதிக்க செய்வதாக சொல்வதை கேட்க முடிகிறது. அதுவும் இந்த வர்ணனையாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றும் போது ரசிகர்களின் அந்த ஆதங்கம் அதிகம் வெளிப்படுகிறது.

image

வர்ணனைக்கு எது அடிப்படையோ அதற்கு நேர் மாறாக விளையாட்டை தவிர்த்து மற்ற அனைத்தையும் இவர்கள் பேசுகிறார்கள். சமயங்களில் அதை அவர்கள் உணரும் போது ‘கம்மிங் பேக் டூ கிரிக்கெட்’ என சொல்லிக் கொள்கின்றனர். இதை அனைவரும் பார்த்திருக்க கூடும்.

“ராயுடு நீ அப்படியே போயிடு” என்பது மாதிரியான கமெண்ட்டுகள் வீரர்கள் மீது வருகின்றன. (இது சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய பிளே-ஆஃப் போட்டியில் சென்னை வீரர் ராயுடு அவுட்டான போது நடந்தது) கரோக்கியலாக பேசினாலும் வீரரை இப்படி வசைபாடுவதில் என்ன நியாயம் உள்ளது. இது ஒரு சோற்று பதம் தான். இப்படி தமிழ் வர்ணனையில் பல சோறு உள்ளது. அதை முறைப்படுத்துவது தமிழ் வர்ணனை குழுவை ஒருங்கிணைப்பவர்களின் பிரதான பணி. அதை செய்தால் தமிழ் கிரிக்கெட் வர்ணனை காதுகளுக்கு இனிக்கும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close