கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீதான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் தகவல்களை பார்ப்போம்…
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசுவை 5க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி அடித்து கொன்றதாக முதல்தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர் எம்.பி. டிஆர்வி ரமேஷ், அவரது தனி உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத் மற்றும் முந்திரி ஆலை ஆட்கள் மீது சட்டப்பிரிவுகள் 202 (கொலைக்குற்றம்), 120பி (சதி செய்தல்), 147, 149, 341, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிந்தராஜூவின் உடலில் இடது கண்ணில் காயமும், மூக்கில் ரத்தம் வடிந்த சுவடும் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என முதலில் பதியப்பட்ட வழக்கு, பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொல்லப்பட்ட கோவிந்தராசு 7 ஆண்டுகளாக கடலூர் எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றியவர், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு உயிரிழப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவாரமாக முந்திரி ஆலையில் தனக்கு பிரச்னை என தெரிந்தவர்களிடம் கோவிந்தராசு கூறி வந்துள்ளார், கடந்த மாதம் 20ஆம் தேதி அதிகாலை எம்.பி. ரமேஷின் உதவியாளர், கோவிந்தராசுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார் எனவும் எப் ஐ ஆர் தெரிவிக்கிறது.
இதனைப்படிக்க...ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படு தோல்விக்கான காரணங்கள் என்ன? – விரிவான அலசல்
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி