Published : 17,Aug 2017 05:31 AM

சிறிய மழைக்கே வெள்ளமாகும் வேளச்சேரி: பொதுமக்கள் வேதனை

Flood-in-Velacherry-due-to-heavy-rain

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் வேளச்சேரியின் சில பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாகினர். தண்ணீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

சென்னையின் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் சிறிது நேரம் கனமழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் டான்சி நகர் பகுதியில் மழை நீர் வடிய வசதியில்லாதால் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுவதால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்துவருவதாக மக்கள் கூறுகின்றனர்.

மழைநீர் தேங்குவது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டான்சி நகரில் வசித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை எப்போது மாறும் என்பதே அவர்களின நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்