[X] Close

பணம் இல்லாத வீட்டை எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்? - கடிதம் எழுதிய திருடன் கைது

குற்றம்

Madhya-Pradesh-Burglars-who-left-behind-note-at-official-home-on-finding-paltry-cash-held
திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் என்ற மாவட்டத்தில் கதேகான் பகுதியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆக இருக்கும் திரிலோச்சின் கவுர் என்பவரது வீடு உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்ற இவர், இரு வாரங்களுக்கு பின் கடந்த 10ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தன. உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் வந்து சோதனை நடத்தியதில் ஒரு கடிதம் சிக்கியது.
 
அக்கடிதத்தில், 'பணமோ விலைமதிப்பு மிக்க பொருளோ இல்லாத இந்த வீட்டை எல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?' என இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் உம்ராவ் சிங் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close