Published : 17,Aug 2017 02:14 AM
உடற்தகுதி தேர்வில் தோற்றதால் யுவராஜ், ரெய்னா நீக்கம்

உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் தான், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருவருக்கும் யோ யோ என்ற உடற்குகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட இருவரும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளனர். இதன் காரணமாகவே இலங்கை அணியுடனான தொடரில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் சேர்க்கப்படவில்லை என தெரியவருகிறது.
முன்னதாக அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு இந்திய அணியில் இருந்து கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.