[X] Close

மதுரை: பெற்றோர் பைக் வாங்கித் தரவில்லை எனக் கூறி கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

தமிழ்நாடு

A-college-student-who-committed-suicide-in-Madurai-in-frustration-that-his-parents-did-not-buy-a-bike

மதுரையில் பெற்றோர் பைக் வாங்கித் தரவில்லை எனக் கூறி கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தென்றல்நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி இவரது மகனான மகேந்திரன் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் மாணவர் மகேந்திரன் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில், அவரது தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த கல்லூரி மாணவர் மகேந்திரன் வீட்டில் தனது அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர் இறந்த வாலிபரின் உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*****

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close