Published : 16,Aug 2017 03:30 PM

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர்: அமெரிக்க ஆய்வறிக்கை தகவல்

us-religious-freedom-report-highlights-cow-protection-violence-in-india

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்து வருவதாக 2016ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா நடத்திய ஆய்வின் அறிக்கை அண்மையில் ட்ரம்ப் நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன. சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்