[X] Close

போலீஸாரிடமிருந்து தப்பிக்க நடுரோட்டில் நடனமாடிய திருடன் கைது

Thief-arrested-for-dancing-in-the-middle-of-the-escape-from-the-police

உத்தரப் பிரதேசத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நடுரோட்டில் விதவிதமாக நடனமாடிய திருடன் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த ரின்கு படோரியா என்பவர் சாலையில் செல்பவர்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டார்.

போலீசார் விசாரித்த போது, தான் திருடன் அல்ல என்றும் நடனமாடுபவர் என்றும் கூறியுள்ளார். நடனமாடுபவர் என்றால், நடனமாடி காண்பிக்குமாறு போலீஸார் கூறியுள்ளனர். அப்போது கால்களையும், இடுப்பையும் வளைத்து ரின்கு பலவித நடனங்களை ஆடியுள்ளார். நடனமாடியும் அவரால் தப்பிக்க முடியவில்லை. போலீசார் அவரை கைது செய்தனர். ரின்கு போலீஸ் முன்பு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close